உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 சாலைகள் பிரியும் இடத்தில் திறந்தவெளி கால்வாயால் ஆபத்து

2 சாலைகள் பிரியும் இடத்தில் திறந்தவெளி கால்வாயால் ஆபத்து

வீரபாண்டி: இரு சாலைகள் பிரியும் இடத்தில் திறந்தவெளி சாக்கடை கால்வாயால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.ஆட்டையாம்பட்டி, சுப்புராவ்புரம் காலனி மாரியம்மன் கோவில் அருகே ஊருக்குள் செல்ல, வெள்ளையகவுண்டர் காடு செல்ல என, இரு சாலைகள் பிரிகின்றன.அதன் நடுவே நைனாம்பட்டி, ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி குடியிருப்புகளின் கழிவுநீர், சித்தேரிக்கு செல்ல ராட்சத கால்வாய் உள்ளது. அதில் எஸ்.பாப்பாரப்பட்டி மேட்டுக்கடையில் கழிவுநீர் கலக்கும்படி, 3 மாதங்களுக்கு முன், வெள்ளையகவுண்டர் காடு செல்லும் சாலையை வெட்டி இரு குழாய்களை பதித்துள்ளனர்.ஆனால் இதற்கு தோண்டிய பள்ளத்தை முறையாக மூடி தார்ச்சாலையாக மாற்றப்படாததால், மேடு, பள்ளம் நிறைந்த, திறந்தவெளி சாக்கடை கால்வாய் பகுதியை கடக்க, அந்த வழியே இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி, கால்வாய்க்குள் விழுந்து காயமடைகின்றனர்.மேலும் விசைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளதால், உருளைகள், உற்பத்தி செய்த துணிகளை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் கழிவுநீர் கால்வாயில் பள்ளம் இருப்பதே தெரியாத அளவு, கழிவுநீருடன் மழைநீரும் கலந்து மூடி விடுவதால் வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.அதனால், சாக்கடை கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்