உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4ம் நாளும் குவிந்த பக்தர்கள்

4ம் நாளும் குவிந்த பக்தர்கள்

தாரமங்கலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பிப்., 21, 22, 23ல், சுவாமி மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடக்கும். ஆனால், 3 நாட்களும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்த நிலையில், மேக மூட்டம் சூரியனை மறைத்ததால், அந்நிகழ்வை காண முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்ததனர். இந்நிலையில், 4ம் நாளாக நேற்றும், பக்தர்கள் நம்பி குவிந்தனர். ராஜகோபுரம், நந்தி மண்டபத்தை கடந்து, கோவில் உள்ளே லேசாக சூரிய ஒளி தென்பட்டது. பக்தர்கள், 'அரோகரா' கோஷம் எழுப்பினர். ஆனால் மேக மூட்டத்தால் அந்த ஒளி கருவறை உள்ளே செல்லாமல் மறைந்தது. பின் சுவாமிக்கு நட்சத்திர தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை