உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சொர்க்கவாசல் வழியே வந்த பெருமாள் சுவாமி கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

சொர்க்கவாசல் வழியே வந்த பெருமாள் சுவாமி கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

சேலம்: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு, நேற்று அதிகாலை நடந்தது. முன்னதாக, அழகிரி-நாதர், சுந்தரவல்லி தாயார், ஆஞ்சநேயர், கரு-டாழ்வார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு, பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிேஷகம் செய்யப்-பட்டது. தொடர்ந்து பட்டாடை உடுத்தி, ரத்தின கிரீடம் அணிவித்து, ராஜ அலங்காரத்தில் அழகிரிநாதர் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து, 'பரமபத வாசல்' எனும் சொர்க்கவாசல் வழியே பவனி வந்தார். அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள், 'கோவிந்தா; கோவிந்தா' என கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து பெருமாளும், தாயாரும், கோவிலை சுற்றி வந்த பின், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.மூலவர், ஆழ்வார், ஆண்டாள், சுந்தரவல்லி தாயார், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, பூஜை செய்த பின், மஹா தீபாராதனை காட்டப்பட்டது.பெருமாளை தரிசிக்க கடுங்குளிரையும் பொருட்-படுத்தாமல், நேற்று முன்தினம் இரவு முதலே, ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். கோவில் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்ட இடத்தில் குவிந்திருந்தனர். ராஜகோபுரத்தின் வலது, இடது புறங்களில், பக்தர்கள் நீண்ட வரி-சையில் காத்திருந்து, அதிகாலை முதல் இரவு வரை தரிசனம் செய்தனர். மாநகர போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் பிருந்தாதேவி, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, மாநகராட்சி கமிஷனர் இளங்-கோவன், மேயர் ராமச்சந்திரன், கோவில் அறங்-காவலர் குழு தலைவர் வெங்கடேஷ்வரி உள்பட பலரும் தரிசனம் செய்தனர்.அதேபோல் பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. அங்கு பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்பட்டது. செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்-கநாதர், வெங்கடாஜலபதி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாக-லமாக நடந்தது.வெங்கட்ரமணர் கோவில்காடையாம்பட்டி காருவள்ளி சின்னதிருப்பதியில் உள்ள வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த சொர்க்கவாசல் திறப்பில், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கட்ரமணர், பக்தர்க-ளுக்கு அருள்பாலித்தார். ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, செயல் அலுவலர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தாரமங்கலம் அருகே அமரகுந்தி கரியபெருமாள் கோவிலில், பூசாரிகள் வேத மந்திரங்கள் முழங்கி, தீபாராதனை செய்து சொர்க்கவாசலை திறந்தனர். தொடர்ந்து அதன் வழியே கரியபெ-ருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவமூர்த்திகளை துாக்கிவந்து, பின் கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலில் வைத்தனர். பின் பக்தர்கள், உற்சவ-மூர்த்திகளை தரிசித்து, சொர்க்கவாசல் வழியே சென்றனர்.ஆத்துார், கோட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்-போது, பூதேவி, ஸ்ரீதேவியுடன் வெங்கடேச பெருமாள் எழுந்தருளினார். மூலவர் பெருமாள், தங்க கவசத்தில் அருள்பாலித்தார். மல்லுார் கோட்டை மேடு கோவிந்தராஜ பெருமாள், மல்லுார் சுனைக்கரட்டில் குடைவரை கோவிலான சின்ன ஸ்ரீரங்கம் என அழைக்கப்-படும் வெங்கடேச பெருமாள், கோம்பைக்காடு சத்தியநாராயணன், ச.ஆ.பெரமனுார் ஊராட்சி நத்தமே சென்றாய பெருமாள், தாசநாயக்கன்பட்டி சுயம்பு வரதராஜர், நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர், ஓமலுார், கோட்டை விஜயராகவ பெருமாள், ஆத்துார், விநாயகபுரம் கூட்ரோடு ரங்கநாதர், நர-சிங்கபுரம் சஞ்சீவிராய பெருமாள், ஆறகளூர் கரி-வரதராஜர், வீரகனுார் கஜவரதராஜர், தலை-வாசல் வரதராஜர், தம்மம்பட்டி உக்ரகதலி லட்-சுமி நரசிம்ம பெருமாள், இடைப்பாடி மூக்கரை நர-சிம்ம பெருமாள், சங்ககிரி, வி.என்.பாளையம் வஸந்த வல்லபராஜ பெருமாள் கோவில்களில் சொர்க்க-வாசல் திறப்பு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை