உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நுாற்பாலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் தர்ணா

நுாற்பாலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் தர்ணா

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நாகியம்பட்டி, தண்ணீர் தொட்டி பகுதியில் தனியார் நுாற்பாலை உள்ளது. அங்கு, 27 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், அப்பகுதியினர், 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர். இந்நிலையில் ஆலை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அங்குள்ள இயந்திரங்கள் கழற்றப்பட்டு லாரியில் ஏற்றியுள்ளனர். இதையறிந்த தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி வழங்கிவிட்டு இயந்திரங்களை எடுத்துச்செல்ல வேண்டும் என வலியுறுத்தி, ஆலையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ