| ADDED : நவ 25, 2025 01:42 AM
சேலம், சேலம் அரிசிப்பாளையம், மல்லிசெட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி, 21; காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர், தன் தாய் விஜயா மற்றும் ஒருமாத ஆண் குழந்தையுடன் வந்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:சேலம் மணியனுாரில் உள்ள, என் தாத்தா வீட்டுக்கு அடிக்கடி சென்றபோது, அங்குள்ள சாமுண்டி தெருவை சேர்ந்த வாலிபர் சிவானந்தம், 21, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தோம். கடந்தாண்டு மார்ச்சில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கடந்த மாதம் சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையை பார்க்க சிவானந்தம் ஒருமுறை கூட வரவில்லை. மேலும், எனது மொபைல்போனுக்கு, திருப்பூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோவை அனுப்பி, இனி குழந்தையை பார்க்க வரமாட்டேன் என தகவல் அனுப்பி உள்ளார். எனவே, கணவரை மீட்டு என்னுடன் வாழ வைக்க மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.