உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அவமரியாதை பேச்சு; எஸ்.ஐ., மீது புகார்

அவமரியாதை பேச்சு; எஸ்.ஐ., மீது புகார்

சேலம் : வாழப்பாடியை சேர்ந்தவர் ஜோதி, 56. இவர் வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று மாலை, 5:30 மணிக்கு வந்தார். அப்போது அவரும், அவரது உறவினர்களும், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.இதுகுறித்து ஜோதி கூறியதாவது: என் மகள், மருமகன் ஆகியோர், வாழப்பாடியில் உள்ள என் வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் உறவினர் சக்திவேல் வீட்டுக்கு வந்தார். அவருக்கு ஏற்கனவே இரு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. அவர், 2 நாட்களுக்கு பின், என் மகளை காரில் கடத்திச்சென்றுவிட்டார். இதுகுறித்து கடந்த, 18ல், வாழப்பாடி போலீசில், மருமகன் சரவணகுமார் புகார் கொடுத்தார். 10 நாட்கள் கடந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க ஸ்டேஷனுக்கு உறவினர்களுடன் வந்தேன். அப்போது எஸ்.ஐ., மயில்சாமி, அவமரியாதையாக, தகாத வார்த்தைகளில் பேசினார். இதுகுறித்து உயர் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.எஸ்.ஐ., மயில்சாமி கூறுகையில், ''புகார் குறித்து விசாரித்தோம். தவறாக ஏதும் பேசவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை