உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு வெற்றி: நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த உதயநிதி

தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு வெற்றி: நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த உதயநிதி

சேலம்: சேலத்தில், இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டு, கடந்த, 21ல், தி.மு.க., இளைஞரணி 2வது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு தலைப்பில் நடந்தது.தி.மு.க.,வை அடுத்த நுாற்றாண்டுக்கு அழைத்து செல்லும் ஆற்றல், தகுதி, உரிமை அனைத்தும் உதயநிதிக்கு இருக்கிறது என, அமைச்சர் துரைமுருகன் பேசியது போலவே, பலரும் தி.மு.க.,வை வழிநடத்த உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்து, மாநாடு மூலம் அழைப்பு விடுத்தபடி, பலத்தை வெளிப்படுத்தினர்.இந்நிலையில் மாநாடு முடிந்து, சேலத்தில் இரவு தங்கிய அமைச்சர் உதயநிதி, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் நேருவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, உதயநிதி தெரிவித்த கருத்தை அப்படியே முழுமையாக ஏற்று, நேருவும் இசைவு தெரிவித்தார். அதன்படி, இளைஞரணி மாநாடு வெற்றிக்கு பாடுபட்ட சேலம் முக்கிய நிர்வாகிகளுக்கு மோதிரம் பரிசளிக்க முடிவெடுக்கப்பட்டது.அதற்கான நிகழ்வு உதயநிதி தங்கிய, சொகுசு ஓட்டலில் நடந்தது. மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலர் எஸ்.ஆர்., சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலரான முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மற்றும் மாநகர் செயலர், நகர செயலர் ஆறு பேர், பகுதி செயலர், 13, பேரூர் செயலர், 29 பேர் உள்பட மாநாடு வெற்றியடைய இரவு, பகலாக பாடுபட்ட கட்சியினர் என, 97 பேருக்கு தலா. ஒன்னே கால் பவுன் தங்க மோதிரத்தை அணிவித்து, உதயநிதி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.ஸ்டாலின் முகம் கொண்ட இலச்சை, பதிக்கப்பட்ட மோதிரத்தை பரிசாக பெற்ற கட்சியினர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ