உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.பி.எஸ்., அறிவிப்பால் முதல்வர் தூக்கம் போச்சு

இ.பி.எஸ்., அறிவிப்பால் முதல்வர் தூக்கம் போச்சு

பனமரத்துப்பட்டி: சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம், மல்லுாரில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார். வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:எம்.எல்.ஏ., வீட்டில் ஒரு பெண் கொடுமைப்படுத்தப்பட்டார். 15 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கையில்லை. மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, இ.பி.எஸ்., அறிவித்தார். இதனால், முதல்வர் ஸ்டாலினுக்கு துாக்கம் போச்சு. பின் போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்.இவ்வாறு அவர் பேசினார்.ஒன்றிய செயலர் பாலச்சந்திரன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன், மல்லுார் ஜெ., பேரவை செயலர் பழனிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ