உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விடுதி உரிமையாளர்களுக்கு நடத்தை விதிகள் விளக்கம்

விடுதி உரிமையாளர்களுக்கு நடத்தை விதிகள் விளக்கம்

ஏற்காடு :ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், மேலாளர்கள் இடையே கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அதில், தாசில்தார் மாதவன் பேசியதாவது:விடுதிகளில் உள்ள கூட்ட அரங்கில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து தேர்தல் அலுவலருக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அதிக கூட்டம் சேர்ந்தால் அதுகுறித்தும் தெரிவிக்க வேண்டும். அரசியல் நிகழ்வுகள் இடம்பெற்றால் உடனே போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்.நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், திருமண மண்டபம், இதர சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகளில் உள்ள கூட்ட அரங்கை, அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வாடகைக்கோ, இலவசமாகவோ கொடுக்கக்கூடாது. விடுதிகளில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், வேட்டி, சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.கூட்ட அரங்கில் திருமணம், காது குத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்ய வருவோரிடம், திருமண பத்திரிகை, ரேஷன், ஆதார் கார்டுகள் நகல் உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் பதிவேடுகளில் முறையாக பராமரிக்க வேண்டும்.சந்தேகத்துக்கு இடமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டால் அதுகுறித்து தகவல்களை அருகே உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தாசில்தாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.இதுபோன்ற தகவல் மறைக்கப்பட்டால் விடுதி உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.அதேபோல் மேட்டூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜி தலைமையில் கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை