உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளை; தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு காப்பு

மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளை; தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு காப்பு

சங்ககிரி: மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில், தந்தை, மகன் உள்பட, 3 பேரை, போலீசார் கைது செய்தனர்.சங்ககிரி, ஐவேலி அருகே குள்ளகவுண்டனுாரை சேர்ந்தவர் செல்லம்மாள், 73. இவரது கணவர் இறந்துவிட்டார். மகன், மகள்களுக்கு திருமணமாகி வேறு இடத்தில் வசிக்கின்றனர். இதனால் செல்லம்மாள் மட்டும் தனியே வசிக்கிறார். கடந்த, 13 நள்ளிரவு, செல்லம்மாள் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்-போது அவரது வீட்டின் மேற்கூரையை பிரித்து, 'மங்கி குல்லா' அணிந்து, 3 பேர் உள்ளே இறங்கினர். தொடர்ந்து செல்லம்-மாளை கட்டிப்போட்டு, தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்சென்றனர்.பின் செல்லம்மாள் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் வந்து, கயிற்றை அறுத்துவிட்டனர். தொடர்ந்து செல்லம்மாள் புகார்படி சங்ககிரி போலீசார் விசாரித்ததில், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்நத கோபி, 27, சேலம், தாதகாப்பட்டி கேட், பெரிய மாரியம்மன் கோவில் அருகே உள்ள முரளி, 55, அவரது மகன் ரஞ்சித், 28, ஆகியோரை, கைது செய்தனர். அவர்க-ளிடம் இருந்து, 1 பவுன் நகை, வெள்ளியால் ஆன, 2 தட்டு, 2 காமாட்சி விளக்கு, 3 கொலுசு மற்றும், 3 ஆண்ட்ராய்டு மொபைல் போன், 2 எக்ஸல் மொபட்டுகளை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை