உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கேலோ இண்டியா போட்டி பிளஸ் 2 மாணவர் தேர்வு

கேலோ இண்டியா போட்டி பிளஸ் 2 மாணவர் தேர்வு

சேலம்: சேலம், வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட, மாநில விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.தலைமை ஆசிரியர் ஜெயலேந்திரன் தலைமை வகித்தார். அதில் விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தவிர பிளஸ் 2 மாணவர் அஜய்குமார், தேசிய அளவில் நடக்க உள்ள, 'கேலோ இண்டியா' கோ - -கோ போட்டிக்கு தமிழக அணி சார்பில் தேர்வாகியுள்ளார். அவர் உள்ளிட்ட மாணவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வைத்தியலிங்கம், வலசையூர் ஊராட்சி தலைவர் பழனிவேல் சான்றிதழ், பதக்கங்களை வழங்கினர். தேசிய, மாநில போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர்கள் யோகநாதன், ஸ்டாலின், அன்பன் டேனியல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை