உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளியில் பொன்விழா சங்கமம்

பள்ளியில் பொன்விழா சங்கமம்

தாரமங்கலம்: தாரமங்கலம், செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, 1974ல் உயர்நிலைப்பள்ளியாக இருந்தது. அப்போது, பிளஸ் 1 படித்தவர்களின் பொன்விழா சங்கமம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 50 ஆண்டு நிறைவால், பொன்விழாவாக கொண்டாடினர். இதில், 45 பேர் குடும்பத்தினர், பேரக்குழந்தைகளுடன், பள்ளிக்கு வந்தனர். தொடர்ந்து குடும்பத்தினரை அறிமுகப்படுத்திக்கொண்டனர். பின் அவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை வணங்கி, சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி