உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவிந்தா கோஷம் முழங்க தேரோட்டம் கோலாகலம்

கோவிந்தா கோஷம் முழங்க தேரோட்டம் கோலாகலம்

சேலம்: சேலம், காகாபாளையம் அருகே ராக்கிப்பட்டி, செங்கோடம்பா-ளையம் சென்றாய பெருமாள் மலைக்கோவிலில் பங்குனி தேர் திருவிழா, கடந்த, 8ல் தொடங்கியது. நேற்று தேரோட்டம் நடந்-தது. காலை, 6:00 மணிக்கு சுவாமியை, மலையில் இருந்து இறக்கி தேரில் எழுந்தருளச்செய்தனர். மாலை, 4:00 மணிக்கு சிறிய திருவடியான ஆஞ்சநேயர் தேரை, குழந்தைகள், இளை-ஞர்கள் வடம் பிடித்து இழுத்து, மலைக்கோவிலை வலம் வந்-தனர். தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் வீற்றிருந்த பெரிய தேரை, ஏராளமான பக்தர்கள், 'கோவிந்தா' கோஷம் முழங்க, வடம் பிடித்து இழுத்து, கோவிலை வலம் வந்-தனர். இரவு புஷ்ப விமானத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. நாளை அதிகாலை, 3:00 மணிக்கு சத்தாபரணம், 15ல் மஞ்சள் நீராட்டு வைபவம், ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா முடிந்து, சுவாமி மலைக்கு புறப்படுவார்.அதேபோல் மகுடஞ்சாவடி ஊராட்சி அழகனுார் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை