உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹால் டிக்கெட் வழங்காத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

ஹால் டிக்கெட் வழங்காத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம்:சேலம் மாவட்டத்தில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ -மாணவியருக்கு, ஊரக திறனாய்வு தேர்வு கடந்த, 16ல் நடந்தது. தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 289 மாணவர்கள் தேர்வு எழுத, மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.அங்கு சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், 38 பேருக்கு தேர்வு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. விடைத்தாள் வழங்க ஆசிரியர் வந்தபோது, அப்பள்ளி மாணவர்கள் வராதது தெரிந்தது.இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் கபீர் விசாரித்தார். தலைமை ஆசிரியர் சரவண குமார், மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்காததோடு, தேர்வு குறித்து தெரியப்படுத்தாதது தெரிந்தது.இதனால், சரவணக்குமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, கபீர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ