மேலும் செய்திகள்
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
26-Nov-2024
கெங்கவல்லி: ஆத்துார், கெங்கவல்லி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த, மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.கெங்கவல்லி, கூடமலை, கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று, கெங்கவல்லி போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூடமலை கிராமத்தில், மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த செல்வராஜ், 50, சக்திவேல், 50, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம், 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல், ஆத்துார், மந்தைவெளி நடு பெரியார் தெருவில், மதுபாட்டில் விற்பனை செய்த, சந்திரன் மனைவி அமராவதி, 60, என்பவரை ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர். இவரிடம், 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
26-Nov-2024