பதிவாளராக ஐ.ஏ.எஸ்., நியமிக்க வலியுறுத்தல்
ஓமலுார்: சேலம், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் அறிக்கை: பெரியார் பல்கலையில் பல ஆண்டுகளாக பதிவாளர், தேர்வாணையர் பதவிகள் காலியாகவே உள்ளன. அதில் முழு கூடுதல் பொறுப்பு ஆசிரியர்கள் உள்ளனர். இப்பதவிகளுக்கு இரு முறை விளம்பரம் செய்து நேர்காணல் நடத்தியும் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.இந்நிலையில் நேற்று பதிவாளர், தேர்வாணையர், தொலைநிலைக்கல்வி இயக்குனர் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதை பல்கலை ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. இந்த முறையாவது நிச்சயம், இப்பதவிகள் நிரப்பப்பட வேண்டும். தேர்வு நேர்மையாக நடக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு, இந்திய ஆட்சிப்பணி அதிகாரியை, பதிவாளர் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும் என, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலர், தமிழக முதல்வரை, பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் தேர்வாணையர் பொறுப்புக்கு, புதிதாக மூத்த பேராசிரியர் ஒருவரை நியமிக்க தமிழக அரசு, பல்கலை துணைவேந்தருக்கு உத்தரவிட வேண்டும்.