| ADDED : மே 08, 2024 04:46 AM
சேலம் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், 47.5 டன்னில், கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட, 18.5 அடி உயர காளிதேவி சிலை, நந்திகேஸ்வரர் சிலை ஆகியவை, டாரஸ் லாரியில், கடந்த, 1ல் கேரளாவுக்கு புறப்பட்டது. இது முக்கிய நகரங்கள் வழியே, 1,800 கி.மீ.,க்கு மேல் கடந்து, நேற்று கர்நாடகாவின் ஓசூர் புறநகர் பகுதியை அடைந்தது. அங்கிருந்து புறப்பட்ட இரு சிலைகளும், நேற்றிரவு, 8:45 மணிக்கு சேலம் குரங்குசாவடிக்கு வந்தது. அப்போது, சாலை இருபுறமும், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். இதில், பா.ஜ., மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் கோபிநாத், இயற்கை உணவு மேம்பாடு மைய மாவட்ட தலைவர் சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து கோவையை நோக்கி புறப்பட்டது.திருவனந்தபுரம் அடுத்த வெங்கானுார், சாவாடி நாடாவில் உள்ள பவுர்ணமிகாவு கோவிலில், இந்த இரு சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.