உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கி.ரா.பாளையம் அரசு பள்ளி ஆசிரியர் இடமாற்றம்

கி.ரா.பாளையம் அரசு பள்ளி ஆசிரியர் இடமாற்றம்

தலைவாசல்: மக்கள் புகாரால், கிழக்குராஜாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் இடமாற்றப்பட்டார்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, கிழக்குராஜாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ஜெயபிரகாஷூக்கு, மாணவர்கள் கால் பிடித்து விடும் வீடியோ, கடந்த நவ., 22ல் வெளியானது. இதனால் ஜெயபிரகாஷ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மறுநாள் பள்ளி மாணவ, மாணவியர், மக்கள், அந்த ஆசிரியரின், 'சஸ்பெண்ட்' உத்தரவை திரும்ப பெறக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, 25ல், மாவட்ட இடை நிலை கல்வி அலுவலர் நரசிம்மன், பள்ளியில் மாணவர்கள், பெற்றோர்கள், மக்களிடம் விசாரித்தார். அப்போது அதே பள்ளியில் பணிபுரியும் சமூக அறிவியல் ஆசிரியர் அமரன் தான், மாணவர்கள் கால்பிடித்து விடும் வீடியோவை வெளியிட்டதாக, மக்கள் புகார் கூறினர். தொடர்ந்து மனுவும் வழங்கினர். இந்நிலையில் அமரனை, தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, தற்காலிக இடமாற்றம் செய்து, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் நேற்று உத்தரவிட்டார். முன்னதாக காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் பெரியசாமி, கிழக்குராஜாபாளையம் பள்ளிக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை