உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரேஷன் கடைக்கு நிலம் வழங்கிய ஓய்வு வி.ஏ.ஓ.,வுக்கு பாராட்டு

ரேஷன் கடைக்கு நிலம் வழங்கிய ஓய்வு வி.ஏ.ஓ.,வுக்கு பாராட்டு

சங்ககிரி, சங்ககிரி நகராட்சி, 11வது வார்டில் ரேஷன் கடை கட்டவும், 15வது வார்டில் தீரன் சின்னமலை நினைவு மண்டபம் முன் தரைத்தளத்தில் பேவர் பிளாக் அமைக்கவும், சங்ககிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 32.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.தொடர்ந்து அப்பணிகளுக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., சுந்தரராஜன், பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடை அமைக்க, இலவசமாக நிலம் வழங்கிய, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வையாபுரிக்கு, எம்.எல்.ஏ., நன்றி தெரிவித்தார். அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ