உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டு மண் சுவர் விழுந்து கூலித் தொழிலாளி பலி

வீட்டு மண் சுவர் விழுந்து கூலித் தொழிலாளி பலி

காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் அடுத்த கூட்டாத்துப்பட்டியை சேர்ந்தவர் கோமேதகன், 47. இவருக்கு சொந்தமான சிதிலமடைந்த ஓட்டு வீட்டை, அதே பகுதியை சேர்ந்த சகாதேவன், 55, உள்ளிட்ட சிலர் கடந்த, 23ம் தேதி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ஓட்டு வீட்டின் மண் சுவர் சகாதேவன் மீது விழுந்து படுகாயம் அடைந்தார். மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சகாதேவன் உயிரிழந்தார்.காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை