மேலும் செய்திகள்
தீர்த்தக்குட ஊர்வலம்
08-May-2025
ஆத்துார், ஆத்துார், ராமநாயக்கன்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த ஏப்., 30ல், கணபதி பூஜை, முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. நேற்று, புண்ய நதிகளில் இருந்து எடுத்து வந்த புனித நீரை, யாக சாலையில் வைத்து பூஜை செய்தனர். மேள தாளம் முழங்க யாக சாலையில் இருந்து புனித நீரை எடுத்து வந்த சிவாச்சாரியர்கள், கோபுர கலசம், மூலவர், நவக்கிரக சிலைகள் மீது ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைத்தனர். அப்போது வானில் கழுகு வட்டமிட்டது. பக்தர்கள், 'கருடா... ஓம் சக்தி... பராசக்தி' என, கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் பெத்தநாயக்கன்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், குடுவாத்துப்பாலம் அருகே புதுப்பட்டி மாரியம்மன், விநாயகர், முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், சிறப்பு அன்னதானம் நடந்தது. பெரிய மாரியம்மன்சேலம், வீராணம் அருகே பெரிய வீராணத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று, சிவாச்சாரியார்கள் கலச தீர்தத்தை ஊர்வலமாக எடுத்துச்சென்று மாரியம்மன் விமான கோபுரம், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிேஷகம் நடத்தினர். தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
08-May-2025