சாலையோர புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
தலைவாசல்: சாலையோர புளிய மரத்துக்கு, தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.தலைவாசல் அருகே, வீரகனுார் வழியாக ஆத்துார் - பெரம்பலுார் மாவட்ட நெடுஞ்சாலை செல்கிறது. சாலையின் இருபுறமும், அதிகளவில் புளிய மரங்கள் உள்ளன. நேற்று காலை, 10:00 மணியளவில் சாலையோர புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் மரம் எரிந்து கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் அளித்த புகார்படி, கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் 10:40 மணிக்கு சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து தீ முழுவதையும் அணைத்தனர். தீயில் பாதித்த மரக்கிளையை அகற்றினர்.மரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து, வீரகனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.