மேலும் செய்திகள்
பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவக்கம்
21-Mar-2025
ஓமலுார்:காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு கூடுதலாக, 6 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் கட்ட, பொதுப்பணித்துறை சார்பில், 1.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி, கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தார்.முன்னதாக, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், காமலாபுரம் பிரிவு சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை பார்வையிட்டு, விரைந்து பணியை முடிக்க அறிவுறுத்தினார். ஜெ., பேரவை மாநில துணை செயலர் விக்னேஷ், ஒன்றிய செயலர்கள் செந்தில்குமார், சித்தேஸ்வரன் உடனிருந்தனர்.
21-Mar-2025