உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொட்டி கட்டும் பணி துவக்கி வைத்த எம்.எல்.ஏ.,

தொட்டி கட்டும் பணி துவக்கி வைத்த எம்.எல்.ஏ.,

ஓமலுார்: அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி. இவரது தொகுதி மேம்பாட்டு நிதி, 20 லட்சம் ரூபாயில், காடையாம்பட்டி, கரட்டுக்காட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது.முன்னதாக காடையாம்பட்டி நகர செயலர் ஆனந்த்குமார் தலைமையில் கட்சியினர், இரு-சக்கர வாகனத்தில் பேரணியாக, எம்.எல்.ஏ.,வை வரவேற்றனர். தொடர்ந்து, எம்.எல்.ஏ., மணி, கட்டுமானப்பணியை தொடங்கிவைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை