சேலம்: ''சேலம், பென்னாகரம் எம்.எல்.ஏ.,க்கள் விபரம் தெரியாமல் உள-றிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்க-ளாக உள்ளனர்,'' என, பா.ம.க.,வின் அன்புமணி அணியை சேர்ந்த, மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி தெரிவித்தார்.பா.ம.க., மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:பா.ம.க., விதிப்படி, பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட எந்த கூட்டமும், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவர் தலைமையில் நடத்த வேண்டும். பொதுக்குழுவை கூட்ட, அன்புமணியை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பா.ம.க., பெயரை தவறாக பயன்படுத்தி சேலத்தில் வரும், 29ல், சட்டவிரோதமாக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்-துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து, தேர்தல் கமிஷ-னுக்கு, பா.ம.க., தலைமை முறைப்படி தெரிவித்துள்ளது. நடக்க உள்ளது, பா.ம.க., கூட்டம் அல்ல. போலீசார் அனுமதி, பாது-காப்பு தரக்கூடாது. குறிப்பாக கட்சி பெயரில் பொதுக்குழு, செயற்குழு கூட்ட அனுமதி தர வேண்டாம். கட்சி கொடி, பெயரை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து கார்த்தி அளித்த பேட்டி: சேலத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., அருள், பென்னாகரம் எம்.எல்.ஏ., ஜி.கே.மணி ஆகியோர் விபரம் தெரியாமல் உளறிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். 1989 கொள்கை, விதிகளின்படி, பா.ம.க., என்பது அன்புமணிக்கு சொந்தமானது. நிறுவனத்தலைவர் ராமதாஸ் தான். அதில் மாற்-றுக்கருத்து இல்லை. பொதுக்குழு கூட்ட அதிகாரம் படைத்தவர் அன்புமணி தான். அதில் ராமதாஸ் பங்கேற்கலாமே தவிர, அவரால் அதிகாரமோ, உத்தரவோ பிறப்பிக்க முடியாது. நீக்கம், நியமனம் செய்யவும் அதிகாரம் இல்லை. பா.ம.க., கூட்டணி குறித்து, 29ல் தெரிவிப்பதாக கூறிய நிலையில், அவர்கள் அறி-விக்க முடியாது. அப்படி அறிவித்தாலும் அது, பா.ம.க., வின் கூட்டணி அல்ல.இவ்வாறு அவர் தெரிவித்தார்.