| ADDED : நவ 18, 2025 01:43 AM
சேலம், சோனா கல்வி குழுமம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகத்துடன் இணைந்து தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லுாரியை நடத்தி வருகிறது.இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு, சோனா கல்லுாரி வளாகத்தில் உள்ள சோனா ஆயுஷ் சுகாதார மையத்தில், சோனா இயற்கை நலம் திருவிழா நடந்தது. சோனா இயற்கை மருத்துவக் கல்லுாரி மேலாண்மை அறங்காவலர் தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்து பேசினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். கல்லுாரி சி.எம்.ஒசன்சுசந்தீப் வரவேற்றார். மாணவ மாணவியர், பெற்றோர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், '' சமீபகாலமாக இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வி படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மருத்துவ துறையில் மாணவர்கள் பல சாதனைகளை புரிய வேண்டும்,'' என்றார்.ஏற்பாடுகளை இயற்கை மருத்துவக் கல்லுாரி டீன் வசந்தி பாலமுருகன் செய்திருந்தார். விழாவில் சோனா கல்வி குழும இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர்கள் செந்தில்குமார், காதர்நவாஷ், கனகராஜ், தர்மசம்வர்த்தினி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.