உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மணமான 5 நாளில் புதுப்பெண் மாயம்

மணமான 5 நாளில் புதுப்பெண் மாயம்

தலைவாசல் : தலைவாசல் அருகே நாவலுாரை சேர்ந்த, நல்லுசாமி மகள் காமாட்சி, 20. இவருக்கு கடந்த, 11ல், தம்மம்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 25, என்பவருடன் திருமணமானது. ஆனால் நேற்று முன்தினம், கணவருடன், பெற்றோர் வீட்டுக்கு காமாட்சி வந்தார். அன்று காலை, 11:00 மணிக்கு மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டவர், பின் வீடு திரும்பவில்லை. காமாட்சியின் தாய் செல்லம்மாள் நேற்று அளித்த புகார்படி, வீரகனுார் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி