உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாலத்தில் அடைப்பு: பொக்லைன் மூலம் அகற்றம்

பாலத்தில் அடைப்பு: பொக்லைன் மூலம் அகற்றம்

பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையின் கீழ் பாலம் உள்ளது. அதன் வழியே ஜருகுமலையில் உற்பத்தியாகும் மழைநீர் செல்லும். நேற்று முன்தினம் ஜருகுமலையில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில், மரம், செடி, கொடி, மரக்கட்டை, குப்பை அடித்து வரப்பட்டன. இதில் சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலைக்கு கீழ் உள்ள பாலத்தில் அடைப்பு ஏற்பட்டது. ஏற்கனவே போதிய அகலம், ஆழமும் இல்லை. இந்நிலையில் ஜருகுமலை ஆற்றில் நிரம்பிய மழைநீர், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலைக்கு சென்றது. அச்சாலை மூழ்கி, 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று பொக்லைன் மூலம் பாலத்தில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.பாதிப்பு இல்லைபனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகுமலை உள்ளது. அங்கு நேற்று முன்தினம் கன மழையால் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் பாதிப்பு குறித்து பனமரத்துப்பட்டி கமிஷனர் செல்வகுமார், ஊராட்சி தலைவர் பழனியம்மாள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்டோர், நேற்று ஜருகுமலையில் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறையினர் கூறியதாவது:மலையில் இருந்து தண்ணீர் சென்றதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சிறு அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. ஓடையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு மாடு இறந்து விட்டது. மற்றொரு மாட்டை காணவில்லை. ஆழ்துளை குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதில் எந்த பாதிப்பும் இல்லை. இரு திறந்தவெளி கிணற்றில் இருந்து குடிநீர் அல்லாத மற்ற பயன்பாட்டுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டது. அந்த கிணற்றில் மழைநீர் புகுந்து விட்டது. அதிலிருந்து மழைநீர் வெளியேற்றப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்