உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 12ல் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்

12ல் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்

சங்ககிரி: சேலம் மாவட்டம் சங்ககிரி மலை அடிவாரத்தில் உள்ள சவுந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா, கடந்த மாதம், 3ல் முகூர்த்தகால் நடுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், விநாயகர், விளக்கு, பூமி தாய் வழிபாடு நடந்தது.நேற்று பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து பஸ்சில் புறப்பட்டு சங்ககிரி வந்தனர். அங்கிருந்து பயணியர் விடுதி சாலை, சேலம் பிரதான சாலை, புதிய இடைப்பாடி சாலை, சார் - பதிவாளர் அலுவலக சாலை, தேர்வீதி வழியே நடந்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். ஊர்வலத்துக்கு முன், பசு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், குதிரைகள், யானை மட்டுமின்றி சிவன், பார்வதி, விநாயகர் போன்ற கடவுள் வேடம் அணிந்து சிவதாண்டவம் ஆடியபடி, கலைஞர்கள் வந்தனர். தொடர்ந்து கோவிலில் தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை