உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சேலம்: சேலம், தாதகாப்பட்டி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம், 60. அ.தி.மு.க., கொண்டலாம்பட்டி பகுதி செயலரான இவர், கடந்த, 3ல் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தி.மு.க., கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்பட, 10 பேரை கைது செய்தனர். கவுன்சிலர் தனலட்சுமி உள்பட, 4 பேரை தேடி வந்தனர். அதில் பள்ளப்பட்டி, முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன், 53, என்பவரை நேற்று கைது செய்தனர். அவர், சதீஷ்குமாரிடம் வேலை பார்த்து வந்ததாகவும், சண்முகம் எங்கு செல்கிறார் என்ற விபரத்தை சேகரித்து தகவல் கொடுத்து வந்ததும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை