உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரபங்கா அளவீடுக்கு எதிர்ப்பு; அதிகாரிகள் மீண்டும் ஏமாற்றம்

சரபங்கா அளவீடுக்கு எதிர்ப்பு; அதிகாரிகள் மீண்டும் ஏமாற்றம்

இடைப்பாடி: சங்ககிரி, அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் உள்ள சரபங்கா ஆற்றை ஒட்டி உட்பகுதிகளில் உள்ள மக்கள், அவரவர் விளைநிலங்களில் விளைவிக்கும் பொருட்களை, பிரதான சாலை வழியே கொண்டு செல்ல முடியாமல் அவதிப்ப-டுகின்றனர். இதனால் சங்ககிரி தாலுகா விவசாய சங்கத்தினர், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக செட்டிப்பட்-டியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மனு கொடுத்தும், 3 முறை அளவீடு செய்வது தள்ளிப்-போனது.இந்நிலையில் அளவீடு செய்ய, பொதுப்பணி கள அலுவலர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் கன-கராஜ், வி.ஏ.ஓ.,க்கள், சர்வேயர்கள், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். அதற்கு ஆக்கி-ரமிப்பு செய்த விவசாயிகள், 'பயிர் செய்யப்பட்டு உள்ளதால் அறுவடை செய்த பின் அளவீடு செய்ய வேண்டும்' எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்-தனர். தொடர்ந்து அங்கு வந்த, தி.மு.க.,வை சேர்ந்த அர-சிராமணி டவுன் பஞ்சாயத்து தலை வர் காவேரி, 'அறுவடை முடிந்த பின் அளவீடு செய்யுங்கள்' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைய-டுத்து அதிகாரிகள் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்