| ADDED : மார் 20, 2024 02:14 AM
வீரபாண்டி:இளம்பிள்ளை
சந்தைப்பேட்டையில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் எதிர் எதிரே
உள்ளன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அக்கோவிலில்
நேற்றிரவு கம்பம் நடுதல், பூச்சாட்டுதலுடன் பங்குனி திருவிழா
தொடங்கியது. வரும், 30ல் விநாயகர் புறப்பாடு, 31 இரவு கொடியேற்றம்,
ஏப்., 3 அதிகாலை மாரியம்மன் திருக்கல்யாணம், காளியம்மன் கோவில் சக்தி
அழைத்தல், குண்டம் இறங்குதல், தேர் வடம் பிடித்தல் நடக்க உள்ளது. 4ல்
தேரோட்டம் நடக்க உள்ளது. அன்று பொங்கல் வைத்தல், அலகு குத்துதல்,
தீச்சட்டி எடுத்தல், பூங்கரகம் ஆகியவை நடக்கும். 5 இரவு சப்தாபரணம்,
6 அதிகாலை கம்பம் பிடுங்குதல், தொடர்ந்து மஞ்சள் நீராட்டு
வைபவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.26ல் தேரோட்டம் தொடக்கம்அதேபோல்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நங்கவள்ளி லட்சுமி
நரசிம்மர், சோமேஸ்வரா கோவிலில் நேற்று காலை கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அருள்பாலிக்க உள்ளார்.
வரும், 26ல் முதல் நாள் தேரோட்டம் தொடங்கி, 30 வரை நடக்க உள்ளது. ஏப்.,
2ல், 7 சுற்று உற்சவத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறும்.