உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பிரிவினை பாதிப்பு தின படங்கள் காட்சி

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பிரிவினை பாதிப்பு தின படங்கள் காட்சி

சேலம்: இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது நடந்த வன்முறையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததால், இந்திய அரசால் ஆக., 14ல் பிரிவினை பாதிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 'அலைடு ஹெல்த் சயின்ஸ்' துறையின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தது. பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, துறை டீன் செந்தில்குமார் முன்னிலையில், கண்காட்சியை, சேலம்(த.நா) வான் அணி தொழிற்நுட்ப(5 - தமிழ்நாடு)கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் முருகானந்தம் திறந்து வைத்தார். இதில் பல்கலையின் நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி கோகுலகண்ணன் பங்கேற்றார்.கண்காட்சியில் பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் விதமான படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பிற கல்லுாரி மாணவர்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாட்டை, துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், டாக்டர்கள் ஜமுனா, ஜெயபாலன் மற்றும் அல்போன்ஸ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை