| ADDED : டிச 06, 2025 06:11 AM
தலைவாசல்: தலைவாசல், பெரியேரி கிராமம், சேலம் - கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ளது. அங்கு பெரியேரி - பாக்கம்பாடி கிராமத்துக்கு, 3 கி.மீ., சாலை அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்தனர். தனி நபர்கள் சிலர், 'எங்கள் நிலம் வழியே சாலை அமைக்கக்கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலை பணி மேற்கொள்ள முடியவில்லை.இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு, அப்பகுதி மக்கள், பெரியேரி - பாக்கம்பாடி வரை, இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என, அதே பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தலை-வாசல் போலீசார் பேச்சு நடத்தினர்.அப்போது, 'சாலை அமைக்கும் பாதை தொடர்பாக, நீதிமன்-றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்கு தீர்வு பெற்ற பின், சாலை அமைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.பள்ளி, கல்லுாரி வாகனங்கள் செல்ல வழி விடுங்கள்' என, போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனால், 9:00 மணிக்கு அனை-வரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.