| ADDED : ஆக 19, 2024 06:07 AM
பனமரத்துப்பட்டி டவுன் மின்வாரிய உதவி பொறியாளர் கட்டுப்பாட்டில் கோம்பைக்காடு, பனமரத்துப்பட்டி டவுன், பெரமனுார், பொய்மான்-கரடு, பள்ளிதெருப்பட்டி, காந்தி நகர், அடிக்கரை, சந்தியூர், எஸ்.ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகு-திகள் உள்ளன. அங்கு ஒரு வாரமாக பகலில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின்தடை ஏற்படு-கிறது. சாரல் மழை பெய்தாலும் மின்தடை ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் மின் தடையை சரி செய்ய நீண்ட நேரமாகிறது. இதுகுறித்து பனமரத்துப்பட்டி டவுன் மின் நு-கர்வோர் கூறியதாவது:தினமும், 10 முறை மின்தடை ஏற்படுவதால், 'டிவி' கணினி, மின்விசிறி, பேன், மிக்சி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதாகின்றன.அடிக்கடி ஒருமுனை மின்சாரம் துண்டிக்கப்பட்டு குறைந்த மின் அழுத்தம் வருகிறது. மழைக்-காலம் என்பதால் கொசு தொல்லை அதிகம் உள்ள நிலையில் பேன் இல்லாமல் துாங்க முடி-யவில்லை. இதற்கு மின்வாரிய அதிகாரிகள் நட-வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.