உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டப்பகலில் சங்கிலி பறிக்க முயன்றவருக்கு மக்கள் கவனிப்பு

பட்டப்பகலில் சங்கிலி பறிக்க முயன்றவருக்கு மக்கள் கவனிப்பு

ஓமலுார்: ஓமலுார் டவுன் பஞ்சாயத்து கள்ளிக்காட்டில் நேற்று மதியம், 12:00 மணிக்கு அகிலாண்டம், 55, என்பவர், வீட்டின் முன் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அப்பெண் அணிந்திருந்த, 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பெண் கூச்சலிட, வாலிபர் தப்ப முயன்றார்.ஆனால் மக்கள், அவரை சுற்றிவளைத்து பிடித்து நன்கு, 'கவனித்து' ஓமலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், குருசாமிபாளையத்தை சேர்ந்த, பி.இ., பட்டதாரி ஜெய்ஹர், 27, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை