பா.ம.க., கண்ணாடி உடைந்து விட்டது இனி ஒட்ட வைக்க முடியாது
ஓமலுார்: தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்டம், ஓமலுார் சட்டசபை தொகுதியில் ஓமலுார் கிழக்கு, தெற்கு, வடக்கு, தாரமங்கலம் கிழக்கு ஒன்றியம், ஓமலுார் பேரூர், கருப்பூர் பேரூர் சார்பில், ஓட்-டுச்சாவடி உறுப்பினர் கூட்டம், கோட்டமேட்டுப்பட்டியில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார்.அதில் ஓமலுார் தொகுதி பொறுப்பாளர் சுகவனம் பேசியதா-வது:தி.மு.க., குடும்ப கட்சி என பேசியவர்கள், தற்போது மேடையில் சண்டையிட்டு கொள்கின்றனர். பா.ம.க., கண்ணாடி உடைந்துவிட்டது. இனி ஒட்டவைக்க முடியாது. ஊராட்சி தலை-வர்கள், ஒன்றிய குழு தலைவர், கவுன்சிலர்களின் பொறுப்புகள் தற்போது முடிகின்றன. 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், உள்-ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அப்போது இங்குள்ள பலருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அரியணையில் அமர, கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலர்கள் செல்வ குமாரன், பாலசுப்ரமணி, கருப்பூர் பேரூர் செயலர் லோக-நாதன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.