உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆலயத்தை அகற்றுவதாக பதிவால் போலீஸ் குவிப்பு

ஆலயத்தை அகற்றுவதாக பதிவால் போலீஸ் குவிப்பு

ஏற்காடு: ஏற்காடு மலைப்பாதை யின், 8வது கொண்டை ஊசி வளைவில் அந்தோணியார் கெபி, மாதா புகைப்படத்துடன் ஆலயம் உள்-ளது. அதை அகற்றுவது குறித்து ஆலோசிப்பதாக, முகநுாலில் நேற்று பதிவிடப்பட்டிருந்தது. இது வெகுவாக பரவியது. இதனால் மத பிரச்னை ஏற்படக்கூடாது என, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், போலீசார் அக்கோவில் பகுதியில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியிலும், கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் ஏற்காடு வரும் வாகனங்களில், தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் சம்-பவ இடத்தில், ஊரக டி.எஸ்.பி., தேன்மொழிவேல் ஆய்வு செய்தார். இச்சம்பவத்தால் ஏற்காட்டில் பதற்றம் நிலவுவதால், நெடுஞ்சாலை துறையினர், கோவிலுக்கு செல்லும் வழியில், 'ரோலர் கோஸ்ட்' தடுப்புகளை அமைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை