மேலும் செய்திகள்
கோயிலில் இலவச திருமணம்
30-Aug-2025
தாரமங்கலம், ஆவணி கடைசி வளர்பிறை முகூர்த்தத்தை ஒட்டி, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் நேற்று, 24 திருமணங்கள் நடந்தன.இதனால் அதிகாலை, 4:00 மணி முதலே, மேள தாளம் முழங்க, மணமக்கள், உறவினர்களால், கோவில் வளாகம் நிரம்பி இருந்தது. அதேபோல் கோவிலில், அறநிலையத்துறை சார்பில் ஒரு திருமணம் நடந்தது.அதில், 4 கிராம் தங்கம், 70,000 ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோகப் பொருட்களை, மணமக்களுக்கு, நகராட்சி தலைவர் குணசேகரன் வழங்கினார். கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் உள்ளிட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.
30-Aug-2025