உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தைகளுக்கு தரமான உணவு; கண்காணிக்க கலெக்டர் அறிவுரை

குழந்தைகளுக்கு தரமான உணவு; கண்காணிக்க கலெக்டர் அறிவுரை

வாழப்பாடி: வாழப்பாடி, பேளூர் டவுன் பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை, நேற்று கலெக்டர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். தான்தோன்றீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள பொது கழிப்பிடம், துாய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்-காணிக்க, செயல் அலுவலருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 24 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணியின் தரத்தை பார்வை-யிட்டார். பின், பேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். தொடர்ந்து தரமாக உணவு வழங்-குவதை கண்காணிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். பள்ளி மேம்பாட்டு மானிய திட்டத்தில், 95.80 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்-டடம், ஆய்வக கட்டடம் கட்டும் பணியையும் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை