உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்

சேலம்: மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை தொடங்கியது. மாவட்ட தலைவர் செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஜான் ஆஸ்டின் உள்ளிட்ட நிர்-வாகிகள் பேசினர். மாலையில், போராட்டம் நிறைவாக, மாநில துணைத்தலைவர் திருவே-ரங்கன் பேசியதாவது:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்-டத்துக்கு, 75:25 அளவில் மத்திய, மாநில அரசு-களின் நிதி பங்களிப்பாக இருந்தபோதே, அந்த நிதியை தமிழக அரசால் சரிவர ஒதுக்க முடிய-வில்லை. இந்நிலையில் நிதி பங்களிப்பை, 60:40 அளவில் மாற்றி, மத்திய அரசு, அதன் பங்க-ளிப்பை குறைத்து, மாநில அரசின் நிதி பங்க-ளிப்பில் உயர்த்திவிட்டது. இதனால், மாநில அர-சுக்கு நிதிச்சுமை அதிகமாகி, இத்திட்டம் முடங்கும் அபாயம் உள்ளது. மேலும் காந்தி பெயரை நீக்கியதில் உடன்பாடில்லை. இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட பொருளாளர் வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை