| ADDED : டிச 06, 2025 06:15 AM
இடைப்பாடி: லோக்சபாவில் நேற்று முன்தினம் பூஜ்ய நேரத்தின்போது, தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., செல்வகணபதி பேசியதா-வது:தமிழக டெல்டா பகுதிகளில் பெருமழை பெய்து, விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லின் ஈரப்பதம் மிகவும் அதிகரித்து, கொள்முதல் செய்ய முடியாத நிலைக்கு சென்றுள்ளது.முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், 'கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு அனுமதிக்கப்பட்ட ஈரப்-பதத்தின் அளவை, 17ல் இருந்து, 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் பல்வேறு பகு-திகளுக்கு பயணம் மேற்கொண்ட, 3 மத்திய குழுவினர், நெல் மாதிரிகளை சேகரித்தபோது, பெருமழை காரணமாகவே நெல்லின் ஈரப்பதம் அதிகரித்ததை, விவசாயிகள் கூறினர். மத்திய குழுவினர் மாதிரிகளை சேகரித்து சென்றனர். ஆனால் மத்திய அரசு, நெல் கொள்முதலுக்கு அனுமதிக்கப்பட்ட ஈரப்பத அளவை அதிகரிக்க மறுத்துவிட்டது. இப்போது குறுவை கால கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், மாநிலத்தில் வடகி-ழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.அதனால் இந்த நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை தளர்த்-தும்படி, மத்திய அரசிடம், தி.மு.க., சார்பில் வலியுறுத்துகிறேன். இல்லையெனில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்-படும்.இவ்வாறு அவர் பேசினார்.