உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / "டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்

"டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்

சேலம்: சேலம், நான்கு ரோடு பெரமனூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம், நான்கு ரோடு பெரமனூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில், மது அருந்தும் குடிமகன்கள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தனர்.இந்த கடையை மாற்றக்கோரி, நேற்று காலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு, வாலிபர் சங்க மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமை வகித்தார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் சாலை மறியல் மேற்கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் உதவி கமிஷனர் கோபி, இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜன், முத்துப்பாண்டி, எஸ்.ஐ.,க்கள் ராஜமாணிக்கம், நசீர் ஆகியோர் மறியலில் ஈடுபட முயன்ற, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 128 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை