சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டை சாலையில் உள்ள, சத்யசாயி சேவா சமிதி சார்பில், பகவான் சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது. வரும், 23 வரை நடக்கும் விழாவில் நேற்று, மாவட்ட அளவில் குழந்தைகள் திறனறிதல் போட்டி நடத்தப்பட்டது. மதியம், சன்னியாசிகுண்டு அன்பு இல்-லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று, தேவியாக்குறிச்சி அரசு தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையத்தில் வஸ்திர தானம், அன்னதானம் வழங்கப்படும். 18ல், சேலம், சின்னதிருப்பதி தாம்பிராஸ் முதியோர் இல்லத்தில் சிறப்பு சாயி பஜனை, சொற்பொழிவு, அன்னதானம், 19ல் உலக மகிளா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை நடக்க உள்ளது.நவ., 20 காலை, சாயி சமிதியில் பல் மருத்துவ சிகிச்சை முகாம், மதியம், அயோத்தியாப்பட்டணம் விழியிழந்தோர் சங்-கத்தில் அன்னதானம், 21ல் அழகாபுரம் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் அன்னதானம், 22ல், செவ்வாய்ப்பேட்டை அரசு விழியிழந்தோர் பள்ளியில் அன்னதானம், 23ல் சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு தினத்தை முன்னிட்டு, காலை, 7:00 மணிக்கு பிரசாந்தி கொடியேற்றம், சத்யசாய் மெட்ரிக் பள்ளி, பால விகாஸ் குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடக்க உள்ளது.