உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.15 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

ரூ.15 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

வாழப்பாடி : வாழப்பாடி அடுத்த பேளூர் வாரச்சந்தையில், 15 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியில் நேற்று ஆடு விற்பனை நடந்தது. சேலம், வெள்ளிமலை, கருமந்துறை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு தொடங்கிய சந்தைக்கு, 1,200 ஆடுகள் வரை விற்பனைக்கு வந்திருந்தது.பத்து கிலோ எடை கொண்ட கிடா ஆடு, 3,500 முதல், 5,000 ரூபாய் வரை விலை போனது. 10 கிலோ எடை கொண்ட பெண் ஆடு, 3,000 முதல் 4,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற சந்தையில், 15 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ