உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

சேலம்: சேலம், உடையாப்பட்டி அருகே குண்டுக்கல்லுாரில் நேற்று அதி-காலை, 4:30 மணிக்கு, ஆண் புள்ளிமானை தெருநாய்கள் துரத்-தின. அப்பகுதியில் உள்ள அரசு கட்டட சுவரில் மோதிய மான், காயம் அடைந்து விழுந்தது.நாய்கள், புள்ளிமானை கடித்து குதறியது. மக்கள் நாய்களை விரட்டினர். ஆனாலும் மான் இறந்துவிட்டது.மக்கள் தகவல்படி, தெற்கு வனச்சரக அலுவலகத்தில் இருந்து வனவர் மணிவண்ணன் தலைமையில் ஊழியர்கள் வந்து, மான் உடலை எடுத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ