உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பஸ் மீது கல்வீச்சு

அரசு பஸ் மீது கல்வீச்சு

சேலம், சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, மின்னாம்பள்ளி நோக்கி அரசு பஸ் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. தலைவாசலை சேர்ந்த பச்சமுத்து, 53, ஓட்டினார். மாலை, 6:30 மணிக்கு, சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த ஒருவர், பஸ் மீது கல்லை வீசினார். முன்புற கண்ணாடி உடைந்தது. பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். மக்கள், கல் வீசியவரை பிடித்து, டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அம்மாபேட்டையை சேர்ந்த பிரேம்குமார், 28, என்பதும், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிந்தது. அவரது பெற்றோர், கண்ணாடி உடைந்ததற்கு செலவை ஏற்பதாக கூறி, அவரை அழைத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை