உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரிக்கு சரபங்கா உபரி நீர் சாத்தியமா என ஆய்வு

ஏரிக்கு சரபங்கா உபரி நீர் சாத்தியமா என ஆய்வு

ஓமலுார், காடையாம்பட்டி, பொம்மியம்பட்டியில், 200 ஏக்கரில், காளை சின்னான் ஏரி(பொம்மியம்பட்டி ஏரி) உள்ளது. அந்த ஏரி வறண்டு காணப்படுவதால், அதை சுற்றியுள்ள, 1,200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் சரபங்கா உழவர் உற்பத்தி குழு சார்பில், காளை சின்னான் ஏரிக்கு, டேனிஷ்பேட்டை மேற்கு சரபங்கா ஆறு உபரி நீர் கொண்டு வந்தால், அப்பகுதி பாசன வசதி பெறும் என, கலெக்டருக்கு மனு வழங்கினர். இதுகுறித்து விவசாயிகள் கூட்டத்திலும் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சியாமளாதேவி தலைமையில் அதிகாரிகள், சரபங்கா உபரிநீர் கால்வாய் மூலம், காளை சின்னான் ஏரிக்கு தண்ணீர்கொண்டு வர சாத்தியக்கூறு உள்ளதா என, நில மட்டம் குறித்து நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ