உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பணி எழுத்துத்தேர்வு நடத்த ஆலோசனை

அரசு பணி எழுத்துத்தேர்வு நடத்த ஆலோசனை

ஓமலுார்: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள, 17 பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, இன்று, நாளை நடக்கிறது. சென்னை, அண்ணா பல்கலை சார்பில் நடத்தப்படும் இத்தேர்வில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சேலம் மாவட்டத்தில், கருப்பூர் அரசு பொறியியல் உள்பட, 8 கல்லுாரிகளில், டிப்ளமோ முடித்தவர்களுக்கு இன்றும், டிகிரி முடித்தவர்களுக்கு நாளையும் தேர்வு நடக்கிறது. இதற்குரிய வினாத்தாள், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு வரப்பட்டு தனி அறையில், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பொறியியல் கல்லுாரி முதல்வர் விஜயன், சென்னை அண்ணா பல்கலையின் தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பரமசிவம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், தேர்வை எவ்வாறு நடத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை