உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செயின் பறிக்க முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

செயின் பறிக்க முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

சேலம்:பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சேலம், அம்மாபேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் பட்டைகோவில் அருகில் ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது மனைவி விஜயா, இவர் கடந்த 2014, டிச., 4ல், வீட்டில் இருந்த போது, சமையல் அறைக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர், அவரது கழுத்திலிருந்த தாலி செயினை பறிக்க முயன்றுள்ளார். விஜயா சத்தம் போடவே, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். அருகில் உள்ளவர்கள் விரட்டி பிடித்து, அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில், அவர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன், 33, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மணிகண்டனுக்கு மூன்று ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி அம்பிகா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி